இந்தியாவில் 63 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று ஒரே நாளில் 86820 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6312584 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 1181 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 98678ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 5273201 பேர் குணமடைந்துள்ள நிலையில், 940705 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்தியாவில் கொரோனா பலி விகிதம் 1.57 சதவீதமாகவும், குணமடைந்தவர்கள் விகிதம் 83.33 சதவீதமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.