இந்தியாவில் 54 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரக் குறிப்பின்படி, கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 92,605 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 54,00,620 ஆக உயர்ந்துள்ளது. இந்த தொற்றுநோயால் இதுவரை 86,752 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,133 பேர் உயிரிழந்துள்ளனர். 

மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 43,03,044 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிகையானது 10,10,824 ஆக உள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் இதுவரை மொத்தம் 6,36,61,060 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் நாடு முழுவதும் 12,06,806 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.