இந்தியாவில் 1.25 லட்சத்தை கடந்த கொரோனா பலி எண்ணிக்கை!

இதுவரை 78,19,887 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,16,632 பேர் நாடு முழுவதும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,25,562 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 50,357 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 53,920 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 577 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். 

இதுவரை நாடு முழுவதும் 11,65,42,304 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 11,13,209 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.