இந்தியாவில் கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 77,06,946 ஆக உயர்வு

இந்தியாவில் கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 77,06,946 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 68,74,518 பேர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் 7,15,812 பேர் தற்போது கோவிட்-19 தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.  1,16,616 பேர் இந்தியாவில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 55,839 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

79,415 பேர் இந்தியாவில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 702 பேர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் சதவீதம் 89.20 ஆகவும், இறப்பு சதவீதம் 1.51 ஆகவும் உள்ளது. இந்தியாவில் இதுவரை மொத்தம் 9,86,70,363 மாதிரிகள் கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 14,69,984 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.