இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 67 லட்சத்தை கடந்தது

கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 67,57,131 எட்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 72,049 பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 57,44,693 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 9,07,883 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 986 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,04,555 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை மொத்தம்  8,22,71,654 கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் 11,99,857 கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.