இந்தியாவில் கொரோனா பாதிப்பு 75 லட்சத்தை கடந்தது!

இதுவரை 66,63,608 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 7,72,055 பேருக்கு இந்தியாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா நோய் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 1,14,610 பேர் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 55,722 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 66,399 பேர் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 579 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் சதவீதம் 88.26 ஆகவும், இறப்பு சதவீதம் 1.52 ஆகவும் உள்ளது. இதுவரை மொத்தம் 9,50,83,976 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 8,59,786 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.