இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவிகிதம் 88.81 ஆக அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது  76,51,107 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 67,95,103 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது நாடு முழுவதும் 7,40,090 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

1,15,914 பேர் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் சதவீதம் 88.81 ஆகவும், இறப்பு சதவீதம் 1.51 ஆகவும் உள்ளது.