இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83 லட்சத்தை கடந்தது!

இதுவரை 76,56,478 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,33,787  பேர் நாடு முழுவதும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,23,611 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 46,253 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 53,357 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து உள்ளனர். 514 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். 

நாட்டில் இதுவரை மொத்தம் 11,29,98,959  மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 12,09,609 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாக ICMR  தெரிவித்துள்ளது.