இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது

கொரோனா பதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சக வெளியிட்ட தகவலின் படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 64,73,545 எட்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 76,476 பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 54,27,707 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 9,44,996 பேர் கொரோனா வைரசுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

128 நாட்களில் பலி எண்ணிக்கை 25,000 கடந்தது. பின்னர் 31 நாட்களில் 25000-50000 பதிவு செய்தது. அடுத்த 24 நாட்களில் 50000-75000 உயிரிழப்பு ஏற்பட்டது. 23 நாட்களில் 75000-100000-ஐ கடந்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பு இறப்பில் 10% இந்தியாவில் நிகழ்ந்துள்ளது.  

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,069 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,00,842 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை மொத்தம் 7,78,50,403 கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் 11,32,675 கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.