இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 லட்சத்தை கடந்தது!

கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரக் குறிப்பின்படி, கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 77,603 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,039 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 60,74,702 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இந்த தொற்றுநோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 95,542 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 50,16,520 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிகையானது 9,62,640 ஆக உள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் இதுவரை மொத்தம் 7,19,67,230 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் நேற்று மட்டும் நாடு முழுவதும் 7,09,394 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.