இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48.46 லட்சமாக உயர்வு!

கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 92,068 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,46,424ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 1,139 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் 79,722 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 77,512 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 37,80,107ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் 9,86,595 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 78 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், கொரோனாவிற்கு உயிரிழந்தவர்கள் விகிதம் 1.64 சதவீதமாக உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 9,78,500 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 5,72,39,428 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.