இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 29,164 பேருக்கு கொரோனா!

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்களின் படி, இந்தியாவில் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 88,74,291 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 82,90,371 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு  குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,53,401 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 1,30,519 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 29,164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 40,791 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 449 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதுவரை 12,65,42,907 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 8,44,382 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.