இந்தியாவில் அதிக லைக் பெற்ற முதல் டீசர்: வாத்தி சாதனை!!

மாஸ்டர் டீசர் 16 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருப்பதாக தகவல். 
 நடிகர் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தின் டீசர் நவம்பர் 14 ஆம் திகதி தீபாவளி அன்று மாலை 6 மணிக்கு ரிலீசாகும் என படக்குழு தெரிவித்தது. சொன்னபடி டீசர் வெளியாகி பட்டையை கிளப்பியது. 
இந்நிலையில் மாஸ்டர் டீசர் வெளியான 16 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருப்பதாகவும், 1.6 மில்லியன் லைக்ஸ்களைப் பெற்றிருப்பதாகவும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவிலேயே அதிக லைக்ஸ்களைப் பெற்ற டீசர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.