இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று!

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50,000-ஐ நெருங்கியுள்ளது.

இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 14.35 லட்சத்தை நெருங்கியுள்ளது.

இதுவரை 8,85,577 பேர் குணமடைந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 32,063 ஆக அதிகரித்துள்ளது.