இந்தியாவின் ‘லே’ நகரை சீனாவின் பகுதி எனக் குறிப்பிட்ட ருவிற்றர் நிறுவனத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை

இந்தியாவின் ‘லே’ நகரை சீனாவின் பகுதி எனக் குறிப்பிட்ட ருவிற்றர் நிறுவனத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, ருவிற்றர் தலைமைச் செயலாளர் ஜேக் டோர்சேவுக்கு அனுப்பிய கடிதத்தில், இந்தியாவின் வரைபடத்தை தவறாகச் சித்தரித்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என மத்திய தகவல் தொழிநுட்பத் துறை செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவின் இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் எதிரான இதுபோன்ற இட அமைப்பு தரவுகளை வைத்திருப்பது சட்டவிரோதமானது என இந்தியா குறிப்பிட்டுள்ளது.

எனவே, ருவிற்றர் மீது தவறான எண்ணத்தையும், அதன் நடுநிலைத் தன்மை குறித்த சந்தேகங்களையும் இந்தச் செயற்பாடு ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.