இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மிகவும் நேர்மையான மனிதரென அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா புகழாரம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மிகவும் நேர்மையான மனிதரென அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா புகழாரம் சூடியுள்ளார்.

A Promised Land என்ற தமது சுயசரிதையில் பராக் ஒபாமா  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் அவர் கூறியுள்ளதாவது, “மன்மோகன் சிங் ஒரு அபூர்வமான அறிவாளியும், நாகரீகமான மனிதரும் ஆவார்.

மேலும், தொலைநோக்கு சிந்தனை கொண்ட அவர், அப்பழுக்கற்ற சுத்தமான தலைவராவார்.இதேவேளை, காலங்காலமாக அமெரிக்க உறவு குறித்து இந்திய அதிகாரிகளிடம் நிலவும் ஐயங்களுக்கு உட்பட்டே அவர் எச்சரிக்கையுடன் அமெரிக்க உறவை கடைப்பிடித்தார்” என குறிப்பிட்டுள்ளார்.