“இந்தியன் 2″கைவிடப்படுகிறதா? ஷங்கரின் அடுத்த திட்டம் என்ன?

Rs 40 crore allocated for a single fight sequence in Indian 2

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வந்த ’இந்தியன் 2’ திரைப்படம் கைவிடப்படுவதாக கோலிவுட்டில் செய்தி பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வந்த ’இந்தியன் 2’ படத்திற்கு ஆரம்பம் முதலே பிரச்சனைகள் இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்து காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாகவும் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவில்லை.
ஆனால் தற்போது படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையிலும் மீண்டும் இந்த படத்தை தொடங்குவதற்கான அறிகுறியே இல்லாமல் உள்ளது. இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் ’இந்தியன் 2’ படத்தை கைவிட்டு வேறு ஒரு படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நான்குக்கும் மேற்பட்ட ஹீரோக்கள் அந்த படத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை ஒரே நேரத்தில் அவர் ஐந்து மொழிகளில் இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் அதே நேரத்தில்’இந்தியன் 2’ படப்பிடிப்பு கைவிடப்படாது என்றும் மீண்டும் தொடரும் என்றும் ’இந்தியன் 2’ படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளது.