இத்தாலியில் கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் -பல கட்டுப்பாடுகளை விடுத்துள்ள அரசாங்கம்

இத்தாலியில் கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த மேலும் பல கட்டுப்பாடுகளை அரசாங்கம் திட்டமிட்டுள்ள து.

ஊரடங்கு உத்தரவுக்கு எதிரான இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டங்கள் இருந்தபோதிலும் இத்தாலி மேலும் தடைகளைத் திட்டமிட்டுள்ளது பிரதமர் கியூசெப் கோன்டே இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமுல்படுத்தித்தப்பட்ட முடக்கத்தை தவிர்க்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.

ஆனால் பல பிராந்தியங்கள் ஒரே இரவில் ஊரடங்கு உத்தரவுகளை விதித்துள்ளன, இந்நிலையில் மேலதிக நடவடிக்கைகளை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.முன்னதாக, லோம்பார்டி, மிலன், காம்பனியா மற்றும் லாசியோ போன்ற பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்ததால் 19,644 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மற்றும் 151 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் நீச்சல் குளங்கள் மூடப்படலாம் என்றும் மாலை 6 மணி முதல் மதுபான நிலையங்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட வேண்டும், அதே நேரத்தில் மக்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு வெளியே பயணிக்க கூடாது என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.ஐரோப்பா முழுவதிலும் உள்ள பல நாடுகளைப் போலவே, இத்தாலிய அரசாங்கமும் பொருளாதாரத்தை முற்றிலுமாக மூடிவிடக்கூடாது என்ற அவநம்பிக்கையுடன் உள்ளது.ஆனால் பொதுக் கூட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்து மக்கள் கோபத்தை தூண்டியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.