இதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நிவாரணம் தரும் இயற்கை வைத்தியம்.

Minutes Matter: Don't Put Your Heart Health On Hold | Willamette Valley  Medical Center

நாம் உறங்கினாலும், விழித்திருந்தாலும், சும்மா இருந்தாலும், சுறுசுறுப்பாக வேலை செய்தாலும் இடைவிடாது துடிப்பது இதயம் ஒன்றுதான். இதயம் நன்கு செயல்பட்டால்தான், உடலின் அனைத்து உறுப்புகளும் நல்ல நிலையில் இருக்கும். அதனால் இதயத்தை நல்ல ஆரோக்கியமாக பேணி காப்பது அவசியமாகிறது.

1. கருந்துளசி இலை, செம்பருத்தி பூ ஆகியவற்றை எடுத்த நன்கு சுத்தம் செய்து பின்பு அதை கஷாயம் செய்து 10 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குறையும். 

2. மாதுளம் பழத்தை எடுத்து தோலை நீக்கி நன்கு அரைத்து பிழிந்து வடிகட்டி அந்த சாற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுவடையும். 

3. பூண்டை சுட்டு  சாப்பிட்டு  பின்பு தண்ணீர் குடித்தால் படபடப்பு குறையும். 

4. திராட்சைப் பழங்களை வெந்நீரில் ஊறவைத்து சாறு எடுத்து அதனுடன் சமஅளவு துளசி சாற்றை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இதயத்தில் ஏற்படும் படபடப்பு குறையும். 

5. வெள்ளரிப் பிஞ்சுகள் கிடைக்கும் காலங்களில் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வந்தால் இதய நோய் குறையும். 

6. அத்திப்பழங்களை சுத்தம் செய்து நன்கு வெயிலில் காயவைத்து கல்லுரலில் போட்டு இடித்து வஸ்த்திரகாயம் (துணியில் சலித்தல்) செய்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இதய பலவீனம் குறையும். 

7. திராட்சைப் பழங்களை வெந்நீரில் ஊறவைத்து சாறு எடுத்து அதனுடன் சமஅளவு துளசி சாற்றை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இதயத்தில் ஏற்படும் படபடப்பு குறையும். மேலும் நார்ச்சத்து நிரம்பிய பயறு வகைகள், முளைகட்டிய தானியங்கள், கீரைகள், பழங்கள், வாழைப் பூ, வாழைத் தண்டு, புடலங்காய், முருங்கை, பீன்ஸ், பலாப்பழக் கொட்டை, ஓட்ஸ் போன்றவற்றை அதிகமாகச் சாப்பிடுவது நல்லது.