இணையத்தில் வைரல் ஆகும் ராஷ்மிகாவின் வொர்க் அவுட் வீடியோ!

Rashmika Mandanna reveals she has not taken a break in three years

நடிகை ராஷ்மிகா வொர்க் அவுட் செய்யும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

“கிரிக் பார்ட்டி” என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதையடுத்து தெலுங்கு சினிமா பக்கம் சென்று அங்கு ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் விஜய் தேவரக்கொண்டாவுடன் அவர் சேர்ந்து நடித்த படங்களான டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் அடித்து தென்னிந்திய சினிமா உச்ச நடிகையாக வலம் வந்தார். இவரின் எக்ஸ்பிரஷன்ஸ்களுக்காகவும், ஜாலியான சுபாவத்தாலும் பலர் இவரின் ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

தற்போது தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் எனும் படத்தில் நடித்து வருகிறார். தமிழில் அடுத்து இவர் ஒரு பெரிய ரௌண்ட் வருவார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடுமையாக ஜிம்மில் வொர்க் அவ்ட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.