இணையத்தில் லீக் ஆன மைக்ரோசாப்ட் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் புகைப்படம்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்பேஸ் டுயோ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

இணையத்தில் லீக் ஆன மைக்ரோசாப்ட் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் புகைப்படம்

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது எதிர்கால சர்பேஸ் டுயோ சாதனத்தை அறிவித்து கிட்டத்தட்ட பத்து மாதங்கள் ஆகிவிட்டது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. 

முன்னதாக மைக்ரோசாப்ட் நிறுவன தயாரிப்பு பிரிவு தலைவர் பனோஸ் பனே இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
ஆண்ட்ரோமெடா எனும் பெயரில் தயாராகும் சர்பேஸ் டுயோ மாடலை மைக்ரோசாப்ட் நிறுவனம் 2016 ஆம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த சாதனம் 2018 ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது எனினும், இதன் வெளியீடு தாமதமானது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்பேஸ் டுயோ

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் கஸ்டமைஸ் செய்யப்பட்ட வெர்ஷனை கொண்டிருக்கிறது. இந்த யூசர் இன்டர்பேஸ் பார்க்க விண்டோஸ் 10 போன்று காட்சியளிக்கிறது. 
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சர்பேஸ் டுயோ மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 256 ஜிபி மெமரி, 11 எம்பி பிரைமரி கேமரா, 5.6 இன்ச் அளவில் இரண்டு ஸ்கிரீன்கள். இரு ஸ்கிரீன்களில் ஒரே சமயத்தில் இரண்டு செயலிகளை இயக்க வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது.


மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்பேஸ் டுயோ மாடல் விலை 999 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 75 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய சர்பேஸ் டுயோ இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.