இணையத்தளம் அடிப்படையிலமைந்த செயலிகள் ஊடாக பல மோசடிகள்!

சமூக வலைத்தளங்கள், இணையத்தளம் அடிப்படையிலமைந்த செயலிகள் மற்றும் செல்லிட கொடுப்பனவுச் செயலிகள் ஊடாக பல வகையான நிதியியல் மோசடிகள் மற்றும் ஏமாற்றுக்கள் இடம்பெற்றுவருகின்றமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவிக்கின்றது.இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.இம்மோசடிகளில் அநேகமானவை பொதுமக்களைக் கவருகின்ற வலைத்தளம் அல்லது செல்லிடத் தொலைபேசி செயலி அடிப்படையிலமைந்த இலகு கடன் திட்டங்கள் ஊடாகவே நடாத்தப்படுகின்றன.அத்தகைய கடன் விண்ணப்ப மதிப்பீட்டுச் செயன்முறையின் போது மோசடிக்காரர்கள் பின்வருவன போன்ற அந்தரங்கமான தனிப்பட்ட வாடிக்கையாளர் தகவல்களைப்பகிர்வதற்கு பொதுமக்களை தூண்டுகின்றனர்.

#srilanka_news