ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட முதல்வர் பழனிசாமி உத்தரவு!

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஆழியாறு அணையிலிருந்து வரும் அக்.7ம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். உரிய இடைவெளி விட்டு 80 நாட்களுக்கு மொத்தம் 2,548 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் அதில், ஆழியாறு அணையிலிருந்து ஆழியாறு படுகை ‘அ’ மண்டலம், பொள்ளாச்சி கால்வாய் ‘அ’ மண்டலம், வேட்டைக்காரன்புதூர் கால்வாய் ‘ஆ’ மண்டலம் சேத்துமடைக் கால்வாய் ‘அ’ மண்டலம் மற்றும் ஆழியாறு ஊட்டுக் கால்வாய் ‘அ’ மண்டலப் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை மாவட்டத்தில் உள்ள 2,2116 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என  மகிழ்ச்சி தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெற வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.