ஆள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பிரியங்கா குற்றச்சாட்டு.


உத்தரபிரதேசத்தில் ஆள்கடத்தல் சம்பவங்களின் எண்ணிக்கை  அதிகரித்து வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சுமத்தியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் இடம்பெறும் பா.ஜ.க.வின் ஆட்சியில் பல்வேறு இன்னல்களுக்கு மக்கள் முகம் கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக பிரியங்கா காந்தி மேலும் கூறியுள்ளதாவது ‘உத்தரபிரதேசத்தில் தொடர்ச்சியாக ஆள்கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.அரசின் மெத்தனமான போக்கே அதிகரிக்கும் ஆட்கடத்தல் சம்பவத்திற்கு முக்கிய காரணமாகும். ஆகவே  சட்ட ஒழுங்கை பாதுகாக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அவர் வலியுறுத்தியுள்ளார்.