ஆளும் லிபரல் அரசால் காலநிலை தொடர்பான பொறுப்பு கூறல் உள்ளடக்கிய சட்டம் வெளியீடு

அரசாங்கத்தால் காலநிலை தொடர்பான பொறுப்பு கூறல்களை உள்ளடக்கிய சட்டமொன்றை அறிமுகம் செய்ய உள்ளது. ஆளும் லிபரல் அரசு பிரதமர் ஜஸ்டின் ரூடோ தலைமையில் 2050 கார்பன் வெளியீட்டின் அளவு பூச்சியமாக குறைக்கும் செயற்திட்டத்தை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் கனடாவில் மாகாணத்திற்க்கு மாகாணம் கார்பன் வெளியீட்டு அளவு மாறுபட்ட அடிப்படையில் காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.அரசாங்கம் எதிர்வரும் வாரமளவில் இந்த சட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் இதன் மூலமாக பூச்சியம் கார்பன் வெளியீட்டு இலக்கை அடைய முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில் கார்பன் வெளியீடு குறித்த இலக்குகளை எதிர்வரும் 2025 ம் ஆண்டு முதல் பேணுவதற்க்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.