ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது

ஹொங்கொங்கில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் Lam Cheuk ting மற்றும் Ted Hui Chi fung ஆகிய எதிர்தரப்பு சட்ட வல்லுநர்கள் இருவரும் அடங்குகின்றனர்.

இவர்கள் இருவரையும் வீட்டில் வைத்தே இன்று (26) காலை கைது செய்யபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டம் அண்மையிலேயே ஹொங்கொங்கில் அமுல்படுத்தப்பட்டது.