ஆரம்பமாகவுள்ளது ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள்

ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை (வியாழக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.கம்பஹா மாவட்டம் மற்றும் குளியாப்பிட்டிய கல்வி வலயம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாளை முதல் 27 ஆம் திகதி வரையில் 39 மத்திய நிலையங்களில் 391 பேரினால் இந்த பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அனைத்து பரிசோதகர்களுக்கும் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு வருகை தருமாறு குறுஞ்செய்தி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.