ஆந்தாலஜி படத்திற்காக இணையும் 4 முன்னணி இயக்குனர்கள்!

புதிய ஆந்தாலஜி அறிவிப்பு: 4 இயக்குநர்கள் கூட்டணி | victim anthology  announced - hindutamil.in

கொரோனா வைரஸ் தளர்வுகள் காரணமாக படப்பிடிப்புகள் தொடங்க அனுமதிக்கப்பட்டாலும், நவம்பர் 10 முதல் திரையரங்குகளுக்கு திறக்க அனுமதி வழங்கப்பட்டாலும் முன்னணி இயக்குனர்கள் திரைப்படம் தயாரிப்பதை விட ஓடிடி தளத்திற்காக ஆந்தாலஜி திரைப்படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஏற்கனவே ஒரு சில முன்னணி இயக்குனர்கள் இயக்கிய ஆந்தாலஜி திரைப்படங்கள் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து ரஜினி, அஜித், விஜய் படங்களை இயக்கிய இயக்குனர்கள் கூட தற்போது ஆந்தாலஜி பக்கம் சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது மேலும் நான்கு முன்னணி இயக்குனர்கள் ஆந்தாலஜி படத்தை இணைத்து இயக்க உள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ’விக்டிம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ரஞ்சித், வெங்கட்பிரபு, சிம்புதேவன் மற்றும் எம் ராஜேஷ் ஆகிய நால்வர் இணைந்து இயக்க உள்ளதாகவும் இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது