ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாகும் கியாரா அத்வானி!

பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை கியார அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாகும் கியாரா அத்வானி!

ராமாயண கதையை மையமாகக் கொண்டு இந்தியாவின் பல மொழிகளில் ஆதிபுருஷ் என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக பிரபாஸ் நடிக்க இருக்கிறார். 3 டியில் உருவாகும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் சாயிப் அலிகான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

அதையடுத்து தற்போது படத்தின் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகையான கியாரா அத்வானி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. படத்தில் அவருக்கு வெயிட்டான ரோல் என்பதால் கதை கேட்டதும் ஓகே சொல்லிவிட்டாராம். முன்னதாக ஈர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கபோவதாக தகவல் வெளியாகியது. ஆனால் கீர்த்தி இந்த படத்திற்கு செட் ஆகமாட்டார் என்பதால் பாலிவுட் நடிகையை தேர்வு செய்துள்ளார் இயக்குனர் ஓம் ரவுத். எனவே விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.