ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று – வைத்தியசாலையின் சில விடுதிகளுக்கு பூட்டு

ஹொரணை ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியர்கள் இருவருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அந்த வைத்தியசாலையின் 5ஆம் மற்றும் 9ஆம் விடுதிகளை  தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கம்பஹாவிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணிப்புரிந்த பெண்ணொருவருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.அதனைத் தொடர்ந்து, அவருடன் பணிப்புரிந்த, நெருங்கியவர்கள் என சிலருக்கும் கோவிட்-19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

தற்போது, நாட்டில் பல்வேறு பகுதிகளில் கோவிட்-19 வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இந்நிலையிலேயே தற்போது தாதியர்கள் இருவருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இலங்கையில் கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 4488 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் இதுவரையில் 13பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.