ஆண் குழந்தைக்கு அப்பாவானர் நடிகர் கார்த்தி!

Actor Karthi with his wife #livedaycinemanews | Indian celebrities,  Celebrity couples, Celebrities

தமிழ் சினிமாவின் பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. அப்பா , அண்ணன் , அண்ணி என மிகப்பெரும் நட்சத்திர குடும்பத்தில் இருந்து சினிமாவில் நுழைந்தாலும் கைதி, பையா, கடைக்குட்டி சிங்கம், காற்று வெளியிடை , ஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ் , சிறுத்தை என பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கான மார்க்கெட்டை பிடித்துக்கொண்டார்.

நடிகர் கார்த்தி கடந்த 2011ம் ஆண்டு ரஞ்சனி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு உமையாள் என்ற அழகிய பெண்குழந்தை இருக்கிறார். இதையடுத்து லாக்டவுனில் மீண்டும் அம்மாவான ரஞ்சனியை கார்த்தி அவரது சொந்த ஊருக்கு கூட்டி சென்று பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் பார்த்துக்கொண்டதாக செய்திகள் வெளியாகியது.

இந்நிலையில் கார்த்தி – ரஞ்சனி தம்பதித்துக்கு இரண்டாவது குழந்தையாக ஆண் மகன் பிறந்துள்ளான். இந்த மகிழ்ச்சியான செய்தியை ட்விட்டரில் வெளியிட்டுள்ள நடிகர் கார்த்தி, மனைவிக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் , செலவிலியர்களுக்கு நன்றி கூறியுள்ளார். அவருக்கு ரசிகர்கள் சிறுத்தைக்கு குட்டி பொறந்தாச்சு என கூறி வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Dear friends and family, we are blessed with a boy baby. We can’t thank enough our doctors and nurses who took us through this life changing experience.