ஆண் ஒருவருடன் வைரலான போட்டோ, வனிதா விளக்கம்…

ஆண் ஒருவருடன் சேர்ந்து கையில் சரக்கு வைத்திருப்பது போன்ற போட்டோ வைரலான நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். நடிகை வனிதா விஜயகுமார் கடந்த சில நாட்களாக தொடர்ந்து செய்திகளில் அடிபட்டு வருகிறார். வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து விமர்சித்ததாக யூ டியூப் பிரபலமான சூர்யா தேவி மீது போலீஸில் புகார் அளித்தார் வனிதா.

அப்போது விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயனுக்கும் சூர்யா தேவிக்கும் தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

இதனால் கடுப்பான நாஞ்சில் விஜயன் வனிதா குறித்த பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வனிதா ஆண் ஒருவருடன் கையில் சரக்குடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்தார்.

மேலும் இது சும்மா ட்ரெயிலர்தான் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனால் வனிதா உடன் இருக்கும் அந்த நபர் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் நடிகை வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த நபருடன் இருக்கும் பல போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

அவர் ஒரு நெருங்கிய குடும்ப நண்பர், அவரது மனைவியும் மகளும் என் குடும்பம்தான். அவரும் அவரது குடும்பத்தினரும் எப்போதும் என் குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவருடன் பீட்டர் பால் இருக்கும் போட்டோக்களையும் வனிதா ஷேர் செய்துள்ளார். இதன் மூலம் நேற்று முதல் வைரலான போட்டோவுக்கு அது ஒன்றுமே இல்லை என முற்றுப்புள்ளி வைத்துள்ளார் வனிதா விஜயகுமார்.