ஆகஸ்ட் 5ம் தேதி வரலாற்று சிறப்புமிக்க நாள் என யோகா குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார்

ஆகஸ்ட் 5ம் தேதி வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று யோகா குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

ராமர் கோயில் பூமி பூஜையில் கலந்து கொள்வதற்காக பாபா ராம்தேவ் அயோத்தி சென்றுள்ளார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆகஸ்ட் 5ம் தேதி வரலாற்று சிறப்புமிக்க நாள் என்றும், வரும் தலைமுறைகள் இந்த நாளை பெருமையுடன் நினைவில் வைத்துக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் பேசும் போது, ‘இந்தியாவில் ஒரு புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது. நாம் இந்த நாளைக் கொண்டாட வேண்டும். ராமர் கோயில் கட்டுவதன் மூலம் நாட்டில், ராம ராஜ்ஜியம் நிறுவப்படும் என நான் நம்புகிறேன். அனைத்து கலாச்சார, பொருளாதார, அரசியல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு இது தீர்வாக இருக்கும். ராமர் கோயில் கட்டப்படுவது நாட்டில் ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்கும்.

ராமர் மற்றும் அனுமன் பக்தரான பிரதமரைக் கொண்டிருப்பது நமது நாட்டின் அதிர்ஷ்டம். இந்து தர்மத்தை பெருமைப்படுத்தியவர் பிரதமர் மோடி’ என்று பாராட்டியுள்ளார்.