அவள்…

Jithin George Photography - Fashion & Portfolio Photographer in Palakkad |  Canvera

அருவியாய் அவிழ்ந்த மொழி
ஆழமாய் மலர்ந்த காதல்
அகந்தையில் அகண்ட விழிகள்
ஆழ் கடலை விழுங்கும் அழகு
அது கண்கள் வணங்கிடும் பேரழகு!

அன்பின் முதல் வரியில்
அகத்தின் முகவரி
ஆசையின் இறுதி வரை
ஆழம் செல்லும் அவள் மொழி
அது ழகரம் வழங்கிடும் அழகுமொழி!

காதலில் உயிர்த்த அவளை
காதலை உயிர்ப்பித்த அவளை
அந்த காதலே தேடும் அவளை !