அவர் ஒரு சாதாரண நடிகர்தானே என நினைத்தேன் – 83 படம் குறித்து கபில் தேவ்!

83' படம் உருவாக்கம்: கபில்தேவ் நம்பிக்கை | kapildev comments about 83 movie  - hindutamil.in

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் குறித்து 83 படம் எடுக்கப்பட்டு வருகிறது.

1983 ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பை வென்றது. இதை அடிப்படையாக வைத்து “83: என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. கபில் தேவ்வின் உண்மைக் கதையான இதில், கபில் தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடித்துவருகிறார். தமிழக வீரர் ஸ்ரீகாந்த் கதாபாத்த்திரத்தில் ஜீவா நடித்து வருகிறார். இந்த படம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆகி இருக்க வேண்டும். ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக ரிலிஸாகவில்லை.

அப்படியே இருக்கீங்களேயா!' - `83' கிரிக்கெட் அணியின் அசல்களும் நகல்களும் |  Original and movie version of 83 world cup winning Indian Cricket Team

இந்நிலையில் இப்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வெளியாக உள்ளது. இந்நிலையில் படம் குறித்து பேசியுள்ள கபில்தேவ் ‘முதலில் இந்த படம் உருவாவதில் எனக்கு தயக்கம் இருந்தது. ரண்வீர் என் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற போது கூட அவர் வெறும் நடிகர்தானே; அவரால் விளையாட்டு வீரனாக நடிக்க முடியுமா என நினைத்தேன். ஆனால் அவர் இந்த படத்துக்காக எவ்வளவு நேரத்தை செலவிடுகிறார் என பார்த்தேன். கடந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை முழுவதும் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் கிரிக்கெட் மைதானத்திலேயே இருந்தார். அங்குதான் ஒரு கலைஞன் வெளிப்படுகிறான். என்னுடன் இருந்த போது என்னுடைய நடவடிக்கைகளை கேமரா மூலம் பதிவு செய்து என்னைப் போலவே செய்து காண்பித்தார். எங்கள் வாழ்நாளிலேயே இது போன்ற ஒரு படம் வருகிறது என்று சொல்லும் போது எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.’ எனத் தெரிவித்துள்ளார்.