அவன் சுவாசத்திற்காக நான்

உயிர்வழிய காதலித்தேன்.உண்மையாக காதலித்தேன்.
அவன் சுவாசத்திற்கு பக்கத்தில் என் சுவாசமும்
இருக்க வேண்டும் என்பதற்காக – அவனை
சுற்றி சிறு வட்டத்திற்குள்ளேயே – என்னை
சிறையிருத்திக் கொண்டேன் – இப்போது
அவன் சுவாசத்திற்காக தவிக்கின்றேன்.