அழகோவியமே….

நித்தமும் உன் நினைவுகளால்

நித்திரை மறந்து போனேனடி!

நீ

ஆசையாய் கூறிய வார்த்தைகள்

என் இருதயத்தில் ஆழமாக

ஊடுருவி தினமும் எனை

கொல்லுதடி!

செவி இனிக்க பதில் தருவாய்

என எண்ணி என் மனமும்

காத்திருக்குதடி.!

மௌனம் களைந்து பதில்

தருவாயோ!