அழகு – காதல் – அவள்

Woman Wearing Red Lipstick · Free Stock Photo

வார்த்தைகளின் வறுமையில்
மௌனத்தின் சத்தமென்ன
நிசப்த தனிமையில்
நிறைந்த நினைவென்ன!

மெதுவாய் மெல்லமாய்
நகரும் நொடியென்ன
இதமாய் வெள்ளமாய்
மலரும் எண்ணமென்ன!

தோட்டத்தின் மையத்தில்
ஒற்றை மந்தாரை அவள்!

காதல் ஓலையில்
பொதிந்த ஒயிலை
மிகுந்து காட்டினாள் அவள்!

மைதீட்டிய கோட்டிலும்
மையல் கொள்ளும் போதிலும்
அவனை முற்றிலும் கொண்டாள்!
அவள்!

அழகு – அவள் காதல் அவள்