அலுவலகமொன்றில் பணிபுரியும் பெண் மீது உயர் அதிகாரியொருவர் தாக்குதல்

நிர்வாக உதவியாளர் ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய மேல்மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உடுகம்பொல அலுவலகத்தின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அலுவலகமொன்றில் பணிப்புரியும் பெண் மீது உயர் அதிகாரியொருவர் தாக்குதல் நடத்துவதாக தெரிவிக்கப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு பெண்ணை தாக்கிய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், அவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பிடப்படுகின்றது.