அருண் விஜய்க்கு கைகொடுத்த நண்பர்… சீக்கிரமே தொடங்கும் திரைப்படம்!

தலை தப்பியது' கடவுளுக்கு நன்றி சொன்ன அருண் விஜய்

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க இருந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் இந்தர் குமார் தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சில மாதங்களுக்கும் முன்னதாக சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் ஹரி இயக்கவுள்ளவுள்ளதாகவும், இந்த படத்திற்கு ‘அருவா’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. ஸ்டுடியோ கிரின் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு நாயகியாக ராஷி கண்ணா நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் இப்போது சூர்யா பாண்டிராஜ் இயக்கும் பெயரிடாத படம் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிப்பதற்கே ஆர்வமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் இப்போது அருவா படம் கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அருவா கதையை லேசாக மாற்றி தனது மனைவியின் தம்பியான அருண் விஜய்யை வைத்து இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த படத்துக்காக போடப்பட்ட பட்ஜெட்டில் இருவரின் சம்பளமும் பெரும்தொகையை எடுத்துக் கொண்டுள்ளதாம். ஆனால் மங்கு திசையில் இருக்கும் ஹரியை நம்பியும், இப்போதுதான் வளர ஆரம்பித்த அருண் விஜய்யை நம்பியும் அவ்வளவு தொகை செலவு செய்ய எந்த தயாரிப்பாளரும் முன் வரவில்லையாம். அதனால் அந்த படத்திற்கான எந்த வித முன்னேற்றமும் இல்லை என சினிமா வட்டாரத்தில் சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த படத்தை அருண் விஜய்யின் நண்பரான இந்தர்குமார் தயாரிக்க முன் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த படத்தில் அவரே ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.