அரசு அலுவலங்கள் 2021 முதல் 5 நாட்களே செயல்படும்- அரசாணை வெளியீடு

கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக அரசு அலுவலங்களில் பணிகள் அனைத்தும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருந்தது. 50% ஊழியர்கள் மற்றும் சுழற்சி முறையில் பணி என்ற கட்டுப்பாடுகளால் பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டிருந்தது. இதனை கருத்தில் கொண்டு திங்கள் முதல் வெள்ளி வரை என்ற 5 வேலை நாட்களை 6 நாட்களாக அதிகரித்து சமீபத்தில் அரசாணை வெளியிட்டிருந்தது. ஓரளவு இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ள நிலையில் தற்போது தமிழக அரசு மற்றொரு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் தமிழக அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் பழைய நடைமுறையான 5 வேலை நாட்கள்  மட்டுமே கடைபிடிக்கப்படும் என அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது.