அரசுப்பணிகளில் நியமிக்கப்படும் பணியாளர்கள் நியமனத்தில் திருத்தம் மேற்கொண்டு தமிழக அரசு அரசாணை வெளியீடு!

கொரோனோ நோய்த்தொற்று காரணமாக அரசுத்துறைகளில் புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கபடக்கூடாது என தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசாணையாக வெளியிட்டிருந்தது இந்த நிலையில் அந்த அரசாணையில் திருத்தம் மேற்கொண்டு புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

மூன்று ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கும் ஆரம்ப நிலை பணியாளர்களை தேர்ந்தெடுக்கலாம் என்றும் கருணை அடிப்படையில் வேலை வழங்குவதற்கு எந்தவித தடையும் இல்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.