அரசியல் பழிவாங்கலிற்காகவே இந்த விசாரணைகள்!! றிசாட்!!

மகிந்தவிற்கு ஆதரவினை வழங்கவில்லை என்பதற்காகவே என்மீது விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக முன்னாள் கைத்தொழில் வணிக அமைச்சர் றிசாட் பதியூதீன் தெரிவித்தார்.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணை ஒன்றிற்காக வவுனியா ஈரற்பெரியகுளம் பொலிஸ்நிலையத்திற்கு இன்று காலை அவர் சமூகமளித்திருந்தார். 
குறித்த விசாரணைகள் முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…..

கடந்த ஏப்ரல் மாதம் மன்னிக்கமுடியாத குற்றம் இந்த நாட்டிலே நடந்துள்ளது. அந்த அனியாயத்தை செய்த சஹ்ரான் குழுவினருக்கு பின்னால் இருந்த அத்தனை பேருக்கும் தண்டணை வழங்கப்படவேண்டும் என்பதில் ஒத்த கருத்துடன் நாம் இருக்கின்றோம்.
இந்த சம்பவம் நடந்து 24 மணித்தியாலத்திற்குள் உதயகம்மன்பில,விமல்வீரவன்ச போன்ற இனவாதிகள் மற்றும் ஒரு சில மதவாதிகள் இந்த தாக்குதலுடன் என்னை தொடர்புபடுத்தி கதைசொன்னார்கள்.
என்னை குற்றவாளிகூண்டிலே நிறுத்துவதற்காக சிங்களமக்கள் மத்தியில் சென்று பிரச்சாரம் செய்தார்கள்.இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக  றிசாட் பதிதியுதீனுக்கு எதிராக ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால் அதனை பொலிசாரிடம் பதிவுசெய்யுமாறு பொலிஸ்மா அதிபர் பொலிஸ்ஊடகபேச்சாளர் ஊடாக அறிவித்திருந்தார். 
அதற்கமைய விமல்வீரவன்ச, உதயகம்மன்பில, அத்துரலிய ரத்தினதேரர் உட்பட பல இனவாதிகள் எனக்கெதிரான குற்றச்சாட்டுக்களை பொலிசாரிடம் முன்வைத்தார்கள். அந்த குற்றச்சாட்டுகளின் விசாரணைகளின் பிரகாரம் எனக்கும் அந்த தாக்குதல் சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தற்போதைய பொலிஸ்மா அதிபர் பாராளுமன்றத்திற்கு எழுத்து மூலமாக அறிவித்திருந்தார். 


இவைநடந்து 15 மாதங்கள் கடந்தபின்னர் தேர்தல் நெருங்குகின்ற நிலையில் என்னை மீண்டும் விசாரணைக்கு அழைத்தார்கள். நானும் சென்றேன். பத்து மணித்தியாலங்கள் என்னிடம் விசாரணைகளை மேற்கொண்டார்கள். இதன்போது எனது அமைச்சு பற்றியும் மன்னாரை சேர்ந்த அலாவுதீன் என்ற நபரை பற்றியும், எமது கட்சிக்கும் அவருக்கும் இருக்கும் தொடர்புகள் பற்றியும் விசாரித்தார்கள்.
அவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளிற்கும் நான் பதிலளித்தேன். அதன் பின்னர் மீண்டும் விசாரணைக்கு வருமாறு தொலைபேசிவாயிலாக எனக்கு அறிவித்தார்கள். இம்முறை தேர்தலில் வடகிழக்கில் எமது கட்சி போட்டியிடுகின்றது. நான் வன்னியில் போட்டியிடுகின்றேன். இதனால் எனது பிரச்சார நடவடிக்கைள் முடங்கியுள்ளது.எனவே இந்த விசாரணையை தேர்தல் முடிந்ததும் நடத்துமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் நான் கோரியிருந்தேன். 

அவர்கள் எனக்கு கால அவகாசத்தினை வழங்கவில்லை. பின்னர் இதுதொடர்பாக தேர்தல் ஆணையகத்திற்கு நான்தெரியப்படுத்தியதன் பிரகாரம் எனது நியாயமான கோரிக்கையினை ஏற்ற தேர்தல் ஆணையகம் அதனை
பொலிஸ்மாஅதிபருக்கு அனுப்பியிருந்தனர். எனினும் புலனாய்வு பிரிவனர் என்னுடைய விசாரணை அவசரமாக தேவை என்று நீதிமன்றிலே கூறியதன் பிரகாரம் வவுனியாவில் எனது கருத்தை தெரிவிக்குமாறு நீதிபதி கூறியிருந்தார். 
அந்தவகையில் வவுனியாவில் இன்று இடம்பெற்ற விசாரணையிலும் அவர்கள் கேட்டகேள்விகளிற்கெல்லாம் நான் பதிலளித்தேன். நான் நிரபராதி என்று அவர்களிற்கும் தெரியும். நாட்டிற்கும் தெரியும். அந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களிற்கு உச்சதண்டனை வழங்கவேண்டும் என்று நான் என்றுமே கூறுவேன். இந்த விசாரணைகள் அனைத்தையும்அரசியல் பழிவாங்கலாகவே நான் பார்கின்றேன். மகிந்தவுடன் இருந்துவிட்டு மைத்திரிக்கு ஆதரவுவழங்கியமை, மற்றும்  52 நாட்களில் அமைக்கப்பட்ட திருட்டு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க என்னையும் அழைத்தார்கள். அந்த நேரத்தில் நான் அவர்களுக்கு கைகொடுக்கவில்லை. ஐனநாயக விரோதமான அரசாங்கத்திற்கு கைகொடுக்கக்கூடாது என்று நாம் எதிர்த்துநின்றோம்.
இதெல்லாவற்றிற்கும் சேர்த்தே இந்ததண்டணைகளை எனக்கு தந்துகொண்டிருக்கின்றனர். மீண்டும் என்னை விசாரணைக்கு அழைத்தால் நீதி மன்றம் சென்று எனது தேர்தல் செயற்பாட்டை மேற்கொள்வதற்கான அனுமதியை பெறுவேன் என்ற