அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் மாவட்ட ஊடக பிரிவின் கிளிநொச்சி அலுவலகம் இன்று அமைச்சர் கெகலிய ரம்புக்வலவினால் திறந்து வைக்கப்பட்டது

அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் மாவட்ட ஊடக பிரிவின் கிளிநொச்சி அலுவலகம் இன்று அமைச்சர் கெகலிய ரம்புக்வலவினால் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது. வருகை தந்திருந்த அமைச்சர் கெலிய ரம்புக்வெல மற்றும் ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆகியோரை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் வரவேற்றார். தொடர்ந்து மாலை அணிவிக்கப்பட்டதுடன் தமிழ் இன்னிய குழுவினரின் வரவேற்புடன் மாவட்ட செயலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் மாவட்ட ஊடக பிரிவின் கிளிநொச்சி அலுவலகம் அமைச்சர் கெகலிய ரம்புக்வலவினால் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் அமைச்சர், ராஜாங்க அமைச்சர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.