அய்யய்யோ என்ன இப்படி ஆகிடுச்சு…? அனிதாவை அசிங்கப்படுத்திய ஹவுஸ்மேட்ஸ்!

குடும்ப உறவுகளை விட்டுவிட்டு பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ள போட்டியாளர்கள் எந்த உறவை மிஸ் செய்யும்போது இங்கிருக்கும் போட்டியாளர்கள் யார் அந்த உறவை நியாபகப்படுகிறார்கள் என்று பிக்பாஸ் கேட்க அதற்கு ஆளாளுக்கு கண்ணீருடன் தங்களது உறவை நினைவு கூறுகிறார்கள்.

அப்படியாக முதலில் அர்ச்சனா தன் அம்மாவை நியப்படுத்துவதாக கூறி ரம்யா பாண்டியன் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதேபோல் பாலாஜியை பார்க்கும்போது என் மகன் நியாபகத்திற்கு வருகிறான் என சுரேஷ் கூறி கண்கலங்கினார். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் அனிதா தன்னுடைய கணவர் பிரபாவை மிஸ் செய்வதாக கூறி கலங்கி அழுதார்.

கணவரை பற்றியே அதிக நேரம் பேசிய அனிதாவினால் சக ஹவுஸ்மேட்ஸ் சலித்துவிட்டனர். பின்னர் சம்யுக்தா குறுக்கிட்டு போதும் நிறுத்து ரொம்ப நேரம் போகுது என கூற அங்கிருந்த அனைவரும் சிரித்து நக்கல் அடித்தனர். இதனால் கோபப்பட்டு அனிதா பாதியிலே பேச்சை நிறுத்துக்கொண்டு மரண மொக்கை வாங்கிவிட்டார். இருந்தும் ப்ரோமோவை பார்த்து இதையெல்லாம் நம்ப முடியாது அவர்கள் ஏன் சிரிக்கிறார்கள் என்பது இன்றைய எபிசோட் பார்த்தால் தான் தெரியும்.