பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வாழ்த்து

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை சிறப்பாக நடைபெற, முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 1992-ம் ஆண்டு நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தாக கூறியுள்ளார். உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்கு மனமார்ந்த பாராட்டு தெரிவித்துள்ளார். பூமி பூஜையில் பங்கேற்கும் பிரதமர் மோடிக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.