அமைச்சின் ஊழல்கள் கடந்த காலத்தில் இடம்பெற்றுள்ளன – இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்

அமைச்சின் ஊழல்கள் கடந்த காலத்தில் இடம்பெற்றுள்ளன என தோட்ட வீடமைப்பு சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

9வது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிலையில், நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.