அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக துணை ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் நேற்று (சனிக்கிழமை) தெரிவித்தார்.

துணை ஜனாதிபதி பென்ஸ் மற்றும் திருமதி. பென்ஸ் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என்றும் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.மேலும் அவர்கள் இருவரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்றும் துணை ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.