அமெரிக்க எல்லையை திறப்பதற்க்கு தற்போது எந்த வித தீர்மானமும் இல்லை -அமெரிக்காவின் கனேடிய தூதுவர் Kirsten Hillman

அமெரிக்காவின் கனேடிய தூதுவர் Kirsten Hillman கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்று பரவுதல் போன்ற நிலைமையை கவனத்தில் கொண்டு மூடப்பட்டுள்ள அமெரிக்க எல்லையை திறப்பதற்க்கு தற்போது எந்த வித தீர்மானமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.கடந்த 21ம் திகதி இரண்டு நாடுகளுக்குமான எல்லைப்பகுதி மூடப்படும் கால எல்லை முடிவடைந்த போதிலும் நவம்பர் 21ம் திகதி வரை திகதி வரை அது நீடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எல்லைப்பகுதியை இரு நாடுகளுக்கும் எதிர்வரும் 2021ம் ஆண்டுக்கு முன்னதாக திறப்பதற்க்கு விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.அத்துடன் போக்குவரத்து எல்லைப்பகுதியில் உள்ள இறுக்கமான நடைமுறையை அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் தளர்த்துவதற்க்கு எந்த விதமான காரணங்களும் இல்லை என்றும் கூறியுள்ளார்.