“அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் விசித்திரமாக உள்ளது” – டொனால்ட் ட்ரம்ப்


அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள், தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போதைய நிலவரப்படி டொனால்ட் டிரம்பைவிட ஜோ பைடன் 50 இடங்கள் கூடுதலாக பெற்றுள்ளார். இந்நிலையில், தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய ஜோ பைடன், அதிபர் பதவிக்கு போதுமான மாநிலங்களை தாங்கள் வென்றுவிட்டதாக தெரிவித்தார். ஜனநாயகம் இந்த தேசத்தின் இதயத்துடிப்பு என்பது மீண்டும் நிரூபிக்கப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கொரோனா தொற்றை எதிர்கொண்டாலும், அமெரிக்க வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாததைவிட அதிகமான அமெரிக்கர்கள் இந்த தேர்தலில் வாக்களித்துள்ளதாகவும் ஜோ பைடன் தெரிவித்தார். 


இதனிடையே, தற்போதைய அதிபரும், குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்டு ட்ரம்ப் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தேர்தல் முடிவுகள் விசித்திரமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். முதலில் பல மாகாணங்களில், தான் முன்னிலையில் இருந்ததாகவும், திடீரென எண்ணப்பட்ட வாக்குகளால் முடிவுகள் மாற தொடங்கியதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.